சதானந்தர் வரலாறு

சதானந்தர் திருவிடை மருதூர் ஸ்ரீ ரங்கராயருக்கு மகனாக உதித்தார்.காசிநாதன் என்று பெயரசூட்டப்பட்டார் வளர்ந்தபிறகு திருவிடைமருதூர் ரயில் நிலையத்தில் நிலைய மேலாளராக பணிபுரிந்தார்

ஆன்மிக நாட்டத்தில் ஈடுபட்டு துறவறம் ஏற்று பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார்

ஆன்மிக நாட்டத்தில் ஈடுபட்டு துறவறம் ஏற்று பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார்ஸ்ரீ தத்தாத்ரேய பகவானை குருவாக ஏற்றுக்கொள்ளும் திருவிடைமருதூர் அவதூத் மௌன சுவாமிகளிடமிருந்து நவகண்ட யோகத்தை கற்று கொண்டார்.

காசிநாதன் என்ற பெயரக்கொண்ட நமது சுவாமிகள் சென்னைக்கு செல்கிறார் . அங்கு சாதானந்தர் என்று ஆன்மிக உலகில் அறியப்படுகிறார்
அக்காலத்தில் சென்னை, மயிலாப்பூர் சித்திரைக்குளத்தினைச்‌ சற்றி செம்பாக்கம் பொன்னம்பல சுவாமிகள்‌, குயப்பேட்டை ஈசூர்‌ சச்சிதானந்த சுவாமிகள்‌, வியாசர்பாடி கரபாத்திர சுவாமிகள்‌, புரசைவாக்கம்‌ வீரசுப்பையா சுவாமிகள்‌, மயிலை குழந்தைவேல்‌ சுவாமிகள்‌ போன்றோருடன்‌ நமது சுவாமிகள் நட்பு கொண்டு ஆன்மிகம் பற்றி விவாதிப்பார்கள்

தன்னுடைய சீடர்கள் சிலரை ஜீவசமாதி அடையச்செய்து, முக்திஅடைய செய்திருக்கிறார்.

நாராயணசாமி என்ற காவல் அதிகாரிக்கு சில அற்புதங்கள் செய்து அவரை சீடராக ஏற்றுக்கொண்டார். நாராயணசாமி சாதானந்த சாமிகளை தன்னுடைய சொந்த ஊரான சென்னை பெருங்களத்தூர் ஆலப்பாக்கதிற்கு அழைத்து சென்று அவருடைய சொந்த நிலத்தில் ஒரு குடில் அமைத்து தங்கவைத்தார்

அங்குள்ளவர்களுக்கு சுவாமிகள் சில வழிபாட்டு முறைகளையும் யோக ரகசியங்களையும் போதித்து வந்தார். ஆலப்பாக்கத்தில் மக்களுக்கு பல அற்புதங்களை செய்து நல் வழிகாட்டியாக திகழ்ந்தார். மக்கள் சுவாமிகளை குருவாகவும் தெய்வமாகவும் கொண்டாடினர். சுவாமிகளின் புகழ் எங்கும் பரவியது.

1922 ஜனவரி 16 ஆம் நாள் தை மாதம் மகம் நட்சத்திரத்தன்று தனது சீடர்களான நாராயணசாமி , வேலுசாமி , பச்சை சாமி மற்றும் பக்தர்கள் முன்னிலையில் சுவாமிகள் இறைநிலையான ஜீவசமாதி அடைந்தார்

பிரதான சீடரும் சதானந்த மடமும்

சுவாமிகள் ஜீவசமாதி அடைந்த பிறகு இவ்விடத்திற்கு ஸ்ரீ சதானந்த மடம் என்று பெயரிட்டு நாராயணசாமி நிர்வகித்து வந்தார். நாராயணசாமிக்கு பிறகு இம்மடத்தை சுவாமிகளின் வழித்தோன்றல்கள் (சீடர்கள்) நிர்வகித்து வந்தனர் பிறகு நாராயனசாமியின் மகன் தூளசிங்கம் அவகளால் இத்திருமடம் நிர்வகிக்கபட்டது. பிறகு கோபால்சாமி , கண்டிராஜு சாமி , மாயாசாமி, சுவாமி சின்மாயானந்தா ஆகியோர் இம்மடத்திற்கு சேவை புரிந்தனர்

தற்போதைய நிர்வாகம்

மாண்பமை நீதியரசர் ப . ஜோதிமணி அவர்கள் சீரிய தலைமையில் அமைந்துள்ள குழுவினர் திறம்பட நிர்வகிக்கபட்டு விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது

பூஜை மற்றும் அன்னதானத்திற்கு உங்கள் பங்களிப்பின் மூலம் இந்த தெய்வீக நிகழ்வில் ஒரு பகுதியாகுங்கள்

பக்தர்கள் அனைவரும் மாத குருபூஜை விழாவில் பங்கேற்று சத்-குருவின் அருளாசி பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம். உங்கள் நன்கொடை செய்ய தயவுசெய்து கீழுள்ள வங்கி கணக்கின் மூலம் அனுப்பவும். QR குறியீட்டை பயன்படுத்தவும் அல்லது +91 89397 74029 என்ற GPAY எண்ணில் மூலம் அனுப்பவும்.